டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச கவர்னர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி முதல்வர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முதலாக இதனை அறிவித்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முதல்வர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அதன் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா இதுபற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
இது குறித்து மேற்கு வங்க மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், மம்தா நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தின் கோரிக்கைகள் குறித்து பேசுகிறார் என்றார்.