மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்றும், நாளையும் என மொத்தம் 2 நாட்கள் இந்த தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. மேற்குவங்காளம் மீது மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதாக கூறி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், சாலை மற்றும் வீட்டுவசதித்துறைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார். மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தால் மேற்குவங்காளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.