மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வௌியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படம் இதுவாகும். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து திரைப்படத்தை இன்று பார்த்தார். இதுகுறித்து
டைரக்டர் மாரிசெல்வராஜ் தனது டிவிட்டரில் கூறியதாவது… மாமன்னன் படத்தை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.