மாறுப்பட்ட கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இப்படம் அடுத்த மாதம் வெளியாவதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள்( வியாழன்) சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.