பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும்,மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளைச் சார்ந்த 16 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின்கீழ் சென்று இருந்தார்கள். இவர்கள் 14/10/2023 முதல் 20/10/2023 வரை மலேசியாவில் மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில், இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட நிகழ்வுகளில், கலந்து கொண்டார்கள், மாணவர்களுடன் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் மற்றும் டீன் அன்பரசன்ஆகியோர் சென்று இருந்தனர். இந்த திட்டத்தில் மூலம் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளில் பங்கெடுத்த மாணவர்கள் 21/10/2023 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன் அய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்பொழுது இந்த திட்டத்தின்மூலம் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள், அதன் பயன்கள் மற்றும் தங்களுடைய அனுபவங்கள் மேலும் அங்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து முதல்வர் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:-தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 16/10/2023 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் நமது கல்லூரியின் பிரதிநிதிகளாக எங்களுடன் மலேஷியாவின் வெளியுறவுத் துறை, துணை அமைச்சரின், தனிச் செயலாளர், திரு. திபின் சுப்ரா மற்றும் ஹோட்டல் டிலா பெர்ன்ஸ் எஸ்டிஎன் பிஎச்டியின் இயக்குனர் திரு. பாலகிருஷ்ணன்ஆகியோர் கலந்துகொண்டனர். மல்டிமீடியா பல்கலைகழத்தின் சார்பில், பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் பேராசிரியர் ஹைருள் அஷார் பின் அப்துல் ரஷீத், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு துறையின், துணை இயக்குனர் முனைவர் ரூபேஷ் சித்தரன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் டீன் என்ஜி பொஹ் கியாட் மற்றும் பேராசிரியர்கள் லிம் வேய் சூங், பாஸ்லி சல்லெஹ் பின் அப்பாஸ், வோங் வய் கிட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன், திறன் மேம்பாட்டு அதிகாரி முனைவர் சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், புலமுதல்வர் (அகடெமிக்) முனைவர் அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) முனைவர் சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) முனைவர் சண்முகசுந்தரம், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.