கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு…
ஸ்ரீரங்கம், கொள்ளிடம் ஆறு பூசாரி மண்டபத்திற்கு எதிர்ப்புறத்தில் அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக திருவரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அதிகாரி ஹரி கிருஷ்ணன் திருவரங்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா ?என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் திருவரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா விற்ற மூதாட்டி கைது
திருச்சி மாநகர மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி தலைமையிலான போலீசார் திருச்சி கோரையாறு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி தனலட்சுமி (67) என்கிற மூதாட்டியை கஞ்சா விற்றதாக மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.