கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வந்துள்ளார். அவர் , பெரம்பலூர் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள மலேசிய தொழிலதிபர் பிரகதிஷ்குமார் இல்லத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறியதாவது:
நான் தொழில் முனைவோர் கூட்டுறவு கழக துணை அமைச்சராக இருப்பதால் விவசாயம் சார்ந்த நம்ம தமிழ்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் ஒரு உறவு பலத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும் மலேசியாவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் அதிகமாக விவசாயத் துறையில் ஈடுபட விரும்புவதால் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு என்பதால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறேன் .அவர்களிடம் தொடர்பு கொண்டு அவை எப்படி தொழில்நுட்பம் விவசாயிகள் இப்போ பழைய பாணியில எதுவும் செய்வது இல்லை.
இந்தியாவிலிருந்து சிறு தானியங்களை எப்படி மலேசியாவுக்கு கொண்டுட்டு போகலாம் என்பது பற்றி பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன்.
மலேசிய அரசாங்கம் விவசாயத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்குறாங்க. ஏறக்குறைய 60 விழுக்காடு உணவு இறக்குமதி செய்றோம். அதை படிப்படியாக குறைச்சிகிட்டு வரணும் என்பது அரசாங்கத்தோட நோக்கம். அந்த வகையில் விவசாயத்துல உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கணும். மலேசியாவில் அரிசி இருக்குது .மற்ற வகையான சிறு தானிய வகைகள் மலேசியால இல்லை. அதை அங்கு உற்பத்தி செய்வது சாத்தியமா என்பதை ஆலோசித்து, சாத்தியம் என்றால் அதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகள் பெற இங்கு வந்து இருக்கிறேன். இது குறித்து பல்கலைக்கழகத்தில் ஆலோசிக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.