Skip to content
Home » ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த மலையாள நடிகையின் கவிதை…

ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த மலையாள நடிகையின் கவிதை…

  • by Authour

தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  நிமிஷாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது நிமிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வந்த பதிவு கவனிக்கப்பட்டு வருகிறது. நிர்வாணமாக வரையப்பட்ட பெண் படத்தில் வரும் பாடல் வரிகள் விமர்சனங்களை பெற்றுவருகின்றன.

சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி மற்றும் என் தொடைகள் வழியாக பயணிக்கின்றன. கண்களை மூடுகிறேன். ஆனால் உன்னைப் பார்க்கிறேன் என்று நடிகை எழுதியுள்ளார்.  இந்த வரிகள்தான் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனை நடிகைதான் பதிவிட்டாரா அல்லது யாரோ அவரது கணக்கை ஹேக் செய்தார்களா பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இதை நடிகையே பதிவிட்டிருப்பதால், நடிகையின் துணிச்சலை சிலர் பாராட்டி வருகின்றனர். இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என மலையாள ரசிர்கள் 24 மணி நேரமும் இந்த கவிதை வரிகளையே சிந்திப்பதால் பலர் தூக்கத்தை தொலைத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *