மயிலாடுதுறையை சார்ந்தவர் கார்த்திக் மாற்றுத்திறனாளி ஆன இவர், மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் பாரா விளையாட்டுப் பந்தயங்களில் தமிழக அணி சார்பில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியா இந்தியா பாரா த்ரோபால் பந்தயம் 2023 இந்திய அணி சார்பில் தமிழகத்தைச் சார்ந்த இவர் பங்கேற்றார். மலேசியா மாற்றுத்திறனாளி வாலிபால் சங்கம் மற்றும் பாரா த்ரோபால் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 14 பேர் கொண்ட குழு பங்கேற்றது ஆடவர் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில் ஆடவர் பிரிவு போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது மலேசிய போட்டியில் பங்கேற்று விட்டு விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ரயில் மூலம் மயிலாடுதுறை திரும்பிய வீரருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சால்வைகள் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.