சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி வழக்கறிஞர் மலர்க்கொடி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை அதிமுகவில் இரந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி உத்தரவிட்டார். மலர்க்கொடி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதில் கூறி உள்ளார்.