Skip to content
Home » மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் வரும் 25ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.தலைவாசல்,ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.இதனால் சுமார் 15ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன்பெ றபோகினறனர்.நம்பகுதி விவசாயிகளின் வா ழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற உயரிய நோக்கோடு டத்தோ பிரகதீஸ்குமார்இதனை முன்னெடுத்து வருகிறார். இதனால் ஒவ்வொரு கிராம பகுதி விவசாயிகளும் இந்த குழுவில் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர். அதன்படி மலையாளபட்டியில் பகுதியில் இன்று காலை 5 ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.டத்தோ பிரகதீஸ்குமார் பெயர்ப்பலகையை திறந்துவைத்து விவசாயிகள் மத்தியில் பேசினார்.அப்போது அவர்,விவசாயத்தில் முன்பு போல் லாபம் என்பது இல்லை.உங்களது பிள்ளைகளை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்கப்படுத்துங்கள்.நான் மட்டும் உயர்ந்த இடத்திற்கு வந்தால் போதாது.நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.எனவே நம்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.அதனால் காய்கறிசந்தை திறப்புவிழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும்.இவ்வாறு டத்தோ பிரகதீஸ்குமார் பேசினார்.முன்னதாக அங்குள்ள கோவிலில் டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் மலையாளபட்டி பகுதி விவசாயிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!