புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில் உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திய சுமார் 9 அடிக்கும் நீலமான மலை பாம்பு ஒன்று கோழியை விழுங்கிய நிலையில் கண்ட
அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருமயம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த திருமயம் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர். புதருக்குள் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து வணத்துறையிடம் ஒப்படைத்தனர்.