திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி ஸ்ரீபதி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்றார். இந்த தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதி 6 மாத கால பயிற்சிக்கு செல்லவுள்ளார்.
நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீபதிக்கு மாலை அணிவித்து ஊர்மக்கள் உர்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராமமக்கள் அவரை ஊர்வலமாக அழைத்துவந்து வாழ்த்து தெரிவித்தனர் . சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமமான ஜவ்வாது மலையில் படித்த ஸ்ரீபதி முதல்மலைவாழ் இன பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். 23 வயதில் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியான ஸ்ரீபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய்க்கும், அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.