Skip to content

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம்.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.! .

தமிழகத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெரும் நோக்கில் அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கபடுகின்றன. இந்த திட்டம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வழங்கபடுகின்றன.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் (United Nation) அமைப்பு பாராட்டி விருது வழங்கியுள்ளது. இது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ” ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின்

அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, கண்காணித்து, மேம்படுத்தி வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம். ” என்ற அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!