திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுயிற்க்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 17.03.23 மாலை 3.30 மணிக்கு மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில், பள்ளி தலைமையாசிரியரை திருமதி .எழிலரசி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , நிர்வாகி ஆர்.கே.ராஜா முன்னிலையில் நடந்தது.
திருச்சி மாவட்ட நூலக வாசக வட்ட தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் வீ. கோவிந்தசாமி மாணவ, மாணவிகளுக்கு தேர்வுயிற்க்கான விளக்கம், தன்னம்பிக்கை, மற்றும் ஊக்கப் பெற பயிற்சியும் வழங்கினார்.:
அதில் மாணவ- மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஒன்றே வெற்றிக்கான அடையாளம். தற்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிகளவு மதிப்பெண் பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறீர்கள். இங்கு படிக்கும் அனைவரும் நடுத்தர குடும்பம் மற்றும் ஏழ்மையான
குடும்பத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பீர்கள். ஒவ்வொரு மாணவ- மாணவியும் தங்கள் மனதிற்குள் ஒரு சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னவென்றால் ‘என்னாலும் முடியும்” என்று நினைத்து படிக்கும்போது எளிதாக இலக்கை அடைவீர்கள்.
கல்வியால் மாணவருக்கும் பெருமை, ஆசிரியருக்கும் பெருமை. அதை விட மற்றொரு பெருமை ஒன்று உண்டு என்றால் பிள்ளைகளால் சாதனை கிடைத்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு பெருமை தானாக தேடி வந்துவிடும். ஆக நாம் கற்கும் கல்வி, நம்மை மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள அத்தனை பேருக்கும் பெருமையை தேடித்தரக்கூடிய மாபெரும் சக்தியாக திகழ்கிறது. எனவே நாம் நன்றாக படித்து நம் லட்சியத்தை நிறைவேற்றிடவும் நம்மால் மற்றவர்களுக்கு பெருமையை தேடித்தரவும் சிறந்த முறையில் கல்வி பயின்று தேர்ச்சி பெற்று சாதனையாளர்களாக வேண்டும் என கூறினார். மேலும் மக்கள் சக்தி இயக்க சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்க்கான பென்சில் , ரப்பர், எழுதுகோல், கணிததிற்கு தேவையான உபகரணங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி, ஆசிரியர்கள் , மாணவ, மாணவிகள் பலர் கலந்துக் கொண்டார்கள்.