சென்ற மாதம் ஜுலை 14ம் தேதி சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த 28 வயதான சமயபுரம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எம். கணேசன் அவர்களது உடல் உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் , இரண்டு கண்கள், நுரையீரல், இதயம், கல்லீரல், ஆகிய ஏழு உறுப்புகளை கொடையாக வழங்கிய கணேசனின் பெற்றோர்களான
தியாகிகள் திருமதி செல்லம்மாள் , திரு.மணிவண்ணன், சகோதரர் உலகஒளி ஆகியோரை , முளைச்சாவு அடைந்த நேரத்தில் எடுத்த உறுதிப்பாட்டிற்கும் , மன உறுதிக்கும், தியாகிகள் வாங்கித் தந்த விடுதலைத் திருநாளில் அவர்களை செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளி அழைத்து, தலைமையாசிரியர் எழிலரசி, மாமன்ற உறுப்பினர் சுரேஷ். மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் வெ.இரா.சந்திரசேகர், கே.சி. நீலமேகம், இரா.இளங்கோ, ஆர்.கே.ராஜா, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில்
பாராட்டுச்சான்றிதழ், பொன்னாடை போர்த்தி , பாராட்டியதுடன் , நன்றி தெரிவிக்கும் முகமாக அனைவரும் எழுந்து நின்று 2ம் நிமிடம் கைதட்டி நன்றியை காணிக்கையாக்கினார்கள் .
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் இது போல உடல் உறுப்பு தானம் செய்த 11ம் குடும்பத்தினர்களுக்கு , ஏழை நிலை உள்ளவர்களுக்கு பணத்துடன், பாராட்டு சான்றிதழ், பொன்னாடை கொடுத்து கெளவரப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இதன் நினைவாக செந்தண்ணீர்புரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்க வெ.இரா.சந்திரசேகர் தலைமையில் தியாகி மணிவண்ணன், மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது.