பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரியவெண்மணி கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாவட்டம் முழுவதும் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும்,
விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் அரசு அலுவலக விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.