மயிலாடுதுறையில் கர்நாடக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது… தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படும். கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் 67 டிஎம்சி நீரை சேமிக்கும் வகையில் அணை கட்டி விட்டால் தமிழ்நாட்டுக்கு முற்றிலுமாக தண்ணீரே கிடைக்காது.
விவசாயிகளுக்கு ரூ 16,000 கோடி வளர்ச்சி நிவாரணமாக வழங்கியது அதிமுக அரசு.
கொரோனா பொது முடக்க காலத்திலும் கூட தடையில்லா உணவு உற்பத்தி செய்தமைக்காக ஐந்து முறை க்ரிஷ் க்ரோமா விருது பெற்றவர் எடப்பாடி யார். தமிழகத்தில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறியது குறித்தும் அதற்கு உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினை குறித்தும் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கவில்லை.