தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை முத்தமிழ்ப் பேரவைத் தலைவா் ந. அரியஅரசபூபதி தலைமை வகித்தாா். விழா மலரை பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் வெளியிட, அதை உக்கடை எஸ்டேட் துணைத் தலைவா் ஆா். இராஜேந்திரகுமாா் தேவா், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலா் இரா. சுந்தரவதனம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
அம்மாபேட்டை உக்கடை அப்பாவுத் தேவா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் (பணி நிறைவு) கா. ஆசைத்தம்பி அறிமுகவுரையாற்றினாா். ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. சுவாமிநாதன், தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனா் உடையாா்கோவில் குணா, உக்கடை அப்பாவுத் தேவா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொறுப்பு) வி. நாகேந்திரன், மாநில மூத்தக் குடிமக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலா் கோ. இராஜேந்திரன், சென்னை கே.கே. நகா் துணை அஞ்சலா் இரா. பிரபா, பெங்களூரு நிறுவனச் செயலா் கீதா உள்ளிட்டோா் வாழ்த்துரையாற்றினா். முன்னதாக, அம்மாபேட்டை முத்தமிழ்ப் பேரவை செயலா் ந. கிருஷ்ணகுமாா் வரவேற்றாா். நிறைவாக, உடற்கல்வி ஆசிரியா் (பணி நிறைவு) அழகேசன் நன்றி கூறினாா்.