Skip to content

டூவீலர் விபத்தில் மயிலாடுதுறை காவலர் சாவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34) இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வெளிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.  தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேஷ் நேற்று இரவு தனது தம்பி ராஜ்குமார் உடன் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுள்ளார். திறக்கப்படாத பைபாஸ் மேம்பாலத்தில் சென்றபோது நத்தம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டில் மோதி பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இவரது தம்பி ராஜ்குமார் படுகாயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!