மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா .முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ராட்சத பலூன்களை பறக்க விடப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் திருமதி நந்தினி ஸ்ரீதர், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சிதலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
