மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மழைப்பொழிவு இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், முன்னிரவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார், சங்கரன்பந்தல், பெரம்பூர், மங்கநல்லூர், குத்தாலம், பூம்புகார், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, திருமுல்லைவாசல், கொள்ளிடம் உள்ளிட்ட, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், கனத்த மழை விட்டுவிட்டு பெய்தது.கடந்த ஒரு சில தினங்களாக மழை இல்லாத நிலையில் தற்போது பெய்த விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு.
மயிலாடுதுறை 5.44 செ.மீ.,
மணல்மேடு 3.62 செ.மீ.,
சீர்காழி 6.7 செ.மீ.,
கொள்ளிடம் 10.84 செ.மீ.,
தரங்கம்பாடி 1.55செ.மீ.,
செம்பனார்கோவில் 3.12செ.மீ.,
மயிலாடுதுறை மாவட்டத்தில் 5.23 செ.மீ., மழை சராசரியாக பெய்துள்ளது.