மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டராக ஏ.பி.மகாபாரதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி மயிலாடுதுறை மக்களுக்குசிறப்பான
முறையில்பணியாற்றுவேன் என்று புதிய கலெக்டர் மகாபாரதி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.அர்ச்சனா ,செல்வி. யுரேகா.,வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், பிஆர்ஓ ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.