மயிலாடுதுறை கலெக்டராக இருப்பவர் ஏ.பி மகாபாரதி. வழக்கம் போல் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதியம் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தஞ்சை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கலெக்டர் மகாபாரதி சேர்க்கப்பட்டார். அங்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கலெக்டர் மகாபாரதி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இன்று அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் சிகிச்சை..
- by Authour