டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னால் கேப்டன் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு.. உலகக்கோப்பை சாம்பியன்ஸ் 2024.. என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது.. ஆனால் இந்திய வீரர்கள் நிதானமாக, தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து எப்போதும் போல் வெற்றியை பெற்றுவிட்டீர்கள். உலகக்கோப்பை மீண்டும் வென்று கொண்டு வந்ததற்காக உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதற்காக வாழ்த்துகள்.. அதேபோல் விலைமதிப்பில்லாத பிறந்தநாள் பரிசுக்காக நன்றியை கூறிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தையும் இணைத்துள்ளார். தோனியின் இந்த பதிவு ட்ரெண்டாகி வருகிறது.