மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மராட்டியத்தில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்டில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. . மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையில் (மகா விகாஸ் அகாடி)ஒரு கூட்டணியும், பாஜக சார்பில் (மகாயுதி) ஒரு கூட்டணியும் போட்டியிட்டன.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. மராட்டியத்தில் ஆரம்பம் முதல் பாஜக கூட்டணி முன்னணியில் இருந்தது. காலை 11 மணி தகவலின்படி பா.ஜனதா கூட்டணி 209 இடங்களில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி – 69 தொகுதிகளிலும், பிற கட்சிகள் -3 தொகுதிகளிலும் முன்னணியில் இருந்தன. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
மராட்டியத்தில் சரத்பவாருக்கு செல்வாக்குள்ள மேற்கு பகுதி தொகுதிகளில சரத்பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இரு கூட்டணிகளும் சரிசமமாக முன்னணியில் இருந்தன. பின்னர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றியை நோக்கி பயணித்தது. அந்த கூட்டணி 52 இடங்களில் முன்னணியில் இருந்தது. பாஜக கூட்டணி 27 இடங்களில் மட்டுமே முன்னணயில் இருந்தது. இங்கு ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜேஎம்.எம் கூட்டணி அதைவிட 11 தொகுதிகளில் கூடுதலாக முன்னணியில் உள்ளது.
ஏற்கனவே 2 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தவர்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டனர்.
கேரளாவில் பிாியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் பிரியங்கா முதல் சுற்றிலேயே முன்னணியில் இருந்தார். தொடர்ந்து அவர் அமோகமாக முன்னேறி வருகிறார். 6 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இந்திய கம்யூ வேட்பாள சத்யன் மொகேரியைவிட பிரியங்கா காந்தி 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் இருந்தார். பின்னர் 2 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றார். அதன்பிறகு 2.3 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றார். அப்போது பிரியங்கா வாங்கியிருந்த ஓட்டுகள் 3, 37, 064. கடந்த பொதுத்தேர்தலில் இங்கு போட்டியிட்ட ராகல் காந்தி 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைவிட கூடுதல் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெறுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக வேட்பாளர் நவ்யா அரிதாஸ் 3ம் இடத்தில் இருந்தார்.
அதுபோல மராட்டிய மாநிலம் நாண்டட் மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சவான் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்தார். பின்னர் பாஜக வேட்பாளர் முன்னணி பெற்றார். ராஜஸ்தானில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 4 ல் பாஜக முன்னணியில் உள்ளது. உ.பியில் 9 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 5ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாடி 3, ஆர்ஜேடி1 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
பஞ்சாபில் 2 தொகுதியில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடகத்தில் 3 சட்டமன்ற தேர்தலுக்க தேர்தல் நடந்தது. இதில் 3 தொகுதியிலும் காங்கிரசே முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், எட்டிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.