தமிழகத்தில் சுமார் 1 கோடியே 10 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15ம் தேதி இந்த தொகை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாதம் தீபாவளி பண்டிகை 12ம் தேதி வருகிறது. எனவே அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் 10ம் தேதிக்குள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனுப்பப்படும் என தெரிகிறது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.