மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது. அரிமழம் விளங்கியம்மன்
ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின் பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க
உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி செல்ல
பக்தர்கள் பால்குடம் ,காவடிகள்எடுத்து வந்தனர். காவடிகள் முக்கிய வீதிகளின் வழியாகசத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன் ஆலயத்தை அடைந்தது.
அங்கு அம்மனுக்குபால் அபிஷேகம்நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்துபக்தர்கள் ,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு திருவிளக்கு பூஜையும் அதனைத்தொடர்ந்து ஸ்ரீகாமாட்சி அம்மன்
வெள்ளிக்கரகம்,அக்கினிஏந்தி
சத்திரம் கிராமத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு குறிசொல்லும்நிகழ்ச்சிநடைபெறுகிறது.