Skip to content

மகா கும்பமேளா நிறைவு- 65 கோடி பேர் புனித நீராடினர்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி.13-ல் மகா கும்பமேளா தொடங்கியது. கடந்த 44 நாட்களாக நடைபெற்ற கும்பமேளா மகா சிவராத்தியுடன்  நேற்று நிறைவடைந்தது.கும்பமேளாவுக்காக 7500 கோடி ரூபாய் செலவில் 4,000 ஹெக்டேர் பரப்பில் மகா கும்ப நகர் தயார் செய்யப்பட்டு 1.6 லட்சம் தங்கும் கூடாரங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள் 30 மிதக்கும் பாலங்கள், 12 கி.மீ. தூரத்திற்கு புனித நீராடும் படித்துறைகள் கட்டப்பட்டன. இந்த மகா கும்பமேளாவில் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  65 கோடி பேர் புனித நீராடியதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

error: Content is protected !!