Skip to content

குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேத ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக இன்று நடைபெற்றது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலின் பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவுற்று இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் உட்பிரகாரத்தில் யாகசாலை கொட்டகை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கடந்த 5 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் கும்பாபிஷேக தினமான இன்று காலை ஐந்தாம் கால யாகசால பூஜைகள் நிறைவடைந்து மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து புனித நீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர விமானத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் கோபுர கலசத்தின் மீது புனித நீர் உற்றி மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

error: Content is protected !!