மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.