கோவை மாவட்டம், டாப்சிலிப் பகுதியில் விட மக்னா கடந்த சில நாட்கள் முன்பு வனப்பகுதியில் இருந்து தப்பியது, பொள்ளாச்சி அருகே கிராமங்களில் உள்ள தென்னை தோப்பு வழியாக பேரூர் சென்றது, இதையடுத்து வனத்துறையினர் மக்னாவிற்க்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி சின்ன தம்பி உதவியுடன் மக்னாவை பிடித்தனர், பின் லாரியில் ஏற்றி மேட்டுபாளையம் வனபகுதியில் விட கொண்டு சென்ற போது அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்னாவை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனபகுதிக்கு
கொண்டு சென்றனர், மக்னாவிற்க்கு ரேடியோ காலர் பெருத்தப்பட்டு உள்ளதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள சுழற்ச்சி முறையில் கண்காணிக்க உள்ளனர்.மேலும்
வால்பாறை கொண்டு செல்லும் வழியில் கவி அருவியில் மக்னாவிற்க்கு உடல் சுடு தனிய சொட்டு நீர் விடும் பைப் கொண்டு தண்ணீர் செலுத்தப்பட்டது. மந்திரி மட்டம் பகுதியில் ஏற்கனவே 9 மக்னா காட்டுயானை இருக்கிறது என்பது குறிபிடதக்கது.