கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி அடர்ந்த வனப் பகுதியில் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் தொந்தரவு செய்து வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வால்பாறை சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் விடப்பட்டது .கடந்த சில வாரங்களாக அங்கு முகாமிட்டிருந்த மக்னா யானை 15 கிலோ மீட்டர் கடந்து வால்பாறை நகரை ஒட்டி உள்ள சிறு குன்றா தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்க குடியிருப்பு பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலும் வனத்துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வால்பாறை நகரை ஒட்டி உள்ள பகுதிக்கு மக்னா யானை வந்துள்ளதால் வால்பாறை நகருக்குள்ளும் யானை வரலாம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.