திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் பாப்பாபட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை அடுத்து பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனை
வழிபட்டனர். இதனை அடுத்து தேர் தலைய அலங்காரம் முடிந்து திரு வீதி உலா வந்தது. தேரை பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து பாப்பாபட்டி கிராமத்தை நகர்வலம் வந்தனர். இந்த திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.