மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இன்று தனது கணவர் விசாகனுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கோவிலுக்கு வந்த ரஜினிகாந்தின் மகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இன்று தனது கணவர் விசாகனுடன் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் ஆகிய இடங்களில் சாமி தரிசனம்
மேற்கொண்டார்.கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா ரஜினிகாந்த் ன் மகளை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்ட பின்னர் நிர்வாகம் சார்பில் அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் அழகர்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய 18ஆம் படி கருப்பண்ணசாமி கோவிலில் கோவில் கதவுகளுக்கு சந்தானம் கொடுத்து சிறப்பு அபிஷேகம் நடத்தி இங்கும் இருவரும் ஜோடியாக நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். 3 மாதங்களுக்கு ஒரு முறை சௌந்தர்யாவும் அவரது கணவரும் அழகர் கோவில் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.