மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணை செயலாளர் ஆக பாலசுப்ரமணியன் இருந்து வந்தார். இவர் இன்று காலை சொக்கி குளம் அருகே வல்லபாய் சாலை பகுதியில் அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 டூவீலரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென பாலசுப்பிரமணியன் அருகே வாகனங்களை நிறுத்தினர். அவர்களை பார்த்ததும் பாலசுப்பிரமணியன் ஒட ஆரம்பித்தார். அப்போது மர்மநபர்கள் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் தான் அமைச்சர் பிடிஆர் தியாகராஜனின் வீடு உள்ளது என்பது குறிப்பிடதக்கது..
