Skip to content
Home » மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

மதுரை எம்பிக்கு திடீர் நெஞ்சுவலி..

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார். நேற்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் சென்ற கட்சியினர், அவரை உடனடியாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்று அட்மிட் செய்தனர். டாக்டர்கள் சோதனை நடத்திய நிலையில் எம்பி வெங்கடேசன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.