Skip to content

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்-முதல்வர் உறுதி

தமிழ்நாடு  தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு  நிறைவு விழா  இன்று மதுரையில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

திமுக அரசு  எப்போதும் வணிகர்களுக்கு  ஆதரவாக  இருக்கிறது.  வணிகர்களின் பணி  பாராட்டுக்கு உரியது.  வணிகர் நலன், மக்கள் நலனில்   நீங்கள் சிறப்பாக  செயல்படுகிறீர்கள்.  அரசின் முயற்சிகளுக்கு  நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பீா்கள். நாங்களும் உங்களுக்கு  ஆதரவாக இருப்போம்.

இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று  பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அழைத்தபோது நீங்கள் மாநாட்டுக்கு  வந்து பேச வேண்டாம். தலைய காட்டிட்டு போங்க என்று தான் சொன்னார்.  இங்கு வந்ததும் மைக் முன்  நிற்க வைத்து பேசும்படி கூறுகிறார்.

மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.  ஏற்கனவே வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம். இப்போது  கோரிக்கைகள் இருக்கிறதா என்ற சந்தேகம் உங்களுக்கே  ஏற்பட்டுள்ளது.  நான் சென்னை செல்ல விமானத்தை பிடிக்கணும் . எனவே இந்த அளவோடு  எனது பேச்சை  முடித்துக்கொள்கிறேன்.

மீண்டும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.   உங்கள் கோரிக்கையை பரிசீலித்து   உறுதியாக செய்வோம்.   நாங்கள் சொன்னதை செய்வோம்.  செய்வதை  சொல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில்  அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.