ஆர். என். ரவி, தமிழ்நாடு கவர்னராக பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை கெடுக்கும் விதத்தில் கவர்னர் ரவி இவ்வாறு செயல்படுகி்றார். தமிழ்நாடு கல்வியில் வளர்வது அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கவர்னர் மீது தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2022ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 2025 ஏப்ரல் வரை இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து வரும் மே 14ம் தேதி முதல் இவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக பல்கலைக்கழக அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.