தமிழர்களின் பண்டிகையான பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும் மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் பொங்கல் திருநாளான வரும் 15ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த தகவலை மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியத்தில் நடைபெறும் என தெரிகிறது.
