ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் கிளை அளித்த உத்தரவு: அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளி அமைக்காவிட்டju’ மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.