சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் போது, அப்பாவி மனுதாரருக்கு, மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது என மதுரை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருச்சி மாவட்டம் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்து வந்த கலையரசன், கடந்த ஆண்டு பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் கலையரசன் பரிதாபமாக இறந்தார். கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதி சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்கியுள்ள நிலையில் அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்பிற்கு 10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி பணியாளருக்கும் ரூ10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் உத்தரவு
- by Authour
