தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு கேட்டு வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் தான் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் தனக்கு BT அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் பதவி உயர்வு அளிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். 2020ல் தொடர்ந்த இந்த வழக்கில் 8 வாரத்தில் பிராங்க்லின் ராஜூன் மனுவை பரிசீலித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலினை செய்யவில்லை தெரிகிறது. இந்த நிலையில் ஆசிரியர் பிராங்க்லின் ராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மற்றொரு மனுவை அளித்தார். அதில் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத சிஇஓ மற்றும் டிஇஓ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி தண்டபாணி நெல்லை முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து இருவரையும் ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டார்..
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..
- by Authour
