மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள கோகுலகண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில் பூசாரி அழகர்சாமி ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகளும், விசேஷ அலங்காரமும் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவில் ஆவரணபெட்டி அழைத்து வருதல், திருக்கண் திறப்பு வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், குழந்தைகள் பலர் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி மகிழ்ந்தனர்.
மதுரை அருகே கோகுல கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா….
- by Authour
