தமிழக கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர் மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு முன் மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதில் உடல்நலன் பாதித்தார். திமுகவினர் கண்டுகொள்ளவில்லை எனவும், உதவி கேட்டும் கிடைக்கவில்லை என்ற விரக்தியிலும் இருந்துள்ளார். இது தொடர்பாக மானகிரி கணேசன் கட்சி மேலிடத்திற்கு பல புகார் கடிதங்கள் எழுதி உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மதுரை மூலக்கரை பகுதியிலுள்ள திமுக எம்எல்ஏ கோ.தளபதியை சந்தித்த நிலையில் அவரது வீட்டின் முன்பாக தீக்குளித்தார். 90% காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருவக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மானகிரி கணேசன் உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திமுக எம்எம்ஏவை சந்தித்தபிறகு அக்கட்சி நிர்வாகி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.