மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து டி.வி.எஸ்.நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் வீட்டிற்கு வந்தார். அவரை மு.க.அழகிரி மற்றும் காந்தி அழகிரி ஆகியோர் வாசலில் வந்து வரவேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் காலின் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதன்பின் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி வீட்டிற்குள் சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்கு பேசினர்.
அதன்பின் வீட்டில் இருந்து வெளியே உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, நான் அமைச்சர் ஆன பின் எனது பெரியப்பாவை(மு.க.அழகிரி) சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தேன். அவர் மனநிறைவோடு வாழ்த்தினார். எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார். முன்னதாக உதயநிதியை வரவேற்க வீட்டு வாசலில் காத்திருந்த அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்கு பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறான் என்றார்.