Skip to content

மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

  • by Authour

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று  காலை தொடங்கியது.   6-ம் தேதி வரை  மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில்   கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாடு தொடங்கியது. இது மதுரையில் நடைபெறும்   மார்க்சிய கம்யூ. கட்சியின் 3வது தேசிய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் , கேரள முதல்வர்   பினராயி விஜயன்,  இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர்  டி. ராஜா,  மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மூத்த தலைவர் பிமான் பாசு

மாலையில் கலை நிகழ்ச்சிகள், திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நடக்கின்றன.

மாநாட்டையொட்டி மதுரையின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக சிவப்புக் கொடி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன

 மாநாட்டிற்கு முன்னோட்டமாக, நேற்று  தமுக்கம் மைதானத்தில் மூத்த பத்திரிகையாளர் என். ராம்   வரலாற்று நிகழ்வு கண்காட்சியை  தொடங்கிவைத்தார்.

நாளை (ஏப்.3) நடக்கும் மாநாட்டுக்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா , மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்.

6-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகள் நடக்கின்றன. அன்றைய தினம் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வும் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை மார்க்சிஸ்ட் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்

 

 

error: Content is protected !!