கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி மதுரை மாநகராட்சி கமிஷனராக லி.மதுபாலன் நியமிக்கப்பட்டார். சுமார் மூணறை மாதத்திற்கு பிறகு மதுபாலன் நேற்று திடீரென தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மதுரை மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் 5 கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திடீர் இடமாற்றத்திற்கு அரசியல் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறி்தது கூறப்படுவதாவது.. மதுரை மாநகராட்சி கமிஷனர் லி.மதுபாலனுக்கும், மேயர் இந்திராணிக்கும், பனிப்போர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்திராணி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் இது குறித்து அவர் புகார் தெரிவித்தாக தெரிகிறது. அதேபோல் மற்றொரு அமைச்சரான மூர்த்தி தரப்பினருக்கும் கமிஷனர் மதுபாலன் ஒத்துபோகவில்லை என கூறப்படுகிறது. மேலும் லோக்சபா தேர்தல் வரும் நிலையில் கமிஷனரை உடனடியாக மாற்றியாக வேண்டும் என அமைச்சர்கள் தரப்பிலும் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே மதுரை மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் திடீர் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
மதுரை மாநகராட்சி கமிஷனரின் திடீர் மாற்றத்திற்கு காரணம் அரசியல்?..
- by Authour
