Skip to content
Home » மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Senthil

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மதுரையில் 12.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு 2.45 மணிக்கு வந்தடைந்தது.

திருச்சி ரயில் நிலையத்தில்
திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் சிவா, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தென்னக ரயில்வே மண்டல மேலாளர் அன்பழகன், மற்றும் தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கொடி அசைத்த துவக்கி வைத்தனர் பின்னர் கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவிற்கு 9.30 மணிக்கு சென்றடைகிறது.
மதுரையிலிருந்து வந்த வந்தே பாரத் ரயிலுக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து 157 மாணவ, மாணவிகள் வந்தே பாரத ரயிலில் கரூர் வரை அழைத்து செல்லப்படுகின்றன. இந்நிகழ்வில் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின்மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா

பெங்களூருக்கு திருச்சியில் இருந்து பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்க வைத்திருந்தோம். சாதாரண ரயிலுக்கு பதிலாக தற்போது வந்தே பாரத் கொடுத்திருப்பது மகிழ்ச்சி

தரக்கூடியது தான் விரைந்து செல்லக்கூடிய ரயிலாக இருக்கும். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏற்கனவே ஒன்று இருந்தது. மற்றொரு வந்தே பாரத் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தான் பயணிக்க வேண்டும் என்ற பயணிகளுக்கு இது உதவியாக இருக்கும். பேருந்தில் கட்டணம் அதிகம் சிரமங்கள் உண்டு. இந்த ரயில்கள் திருச்சி மக்களுக்கும், வழிநெடுக இருக்கும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும். மெட்ரோ ரயில் திருச்சிக்கு தேவையில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு

இது தேவை, இது தேவை இல்லை, என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்யும். எது தேவை என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். திருச்சி என்பது ஒரு வளர்ந்துள்ள நகரம், வளர்ந்து கொண்டிருக்கும் நகரம் ஏராளமான போக்குவரத்து நெரிசல்கள் இருக்கிறது மதுரை, கோவை மற்ற ஊர்கள் இருப்பது போல திருச்சிக்கு மெட்ரோ ரயில் அவசியம். தேவை என்பது காலத்தின் கட்டாயம் எதுவோ அதை மக்கள் கோரிக்கையாக கருத்தில் கொண்டு மாநில அரசு அதை முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசு அதற்கான பங்கை செய்வார்கள். மத்திய அரசு ரயில் திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால், நிதி ஒதுக்க மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு இந்த இடத்தில் பதில் சொல்ல முடியாது. அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு வெளியில் தெரிவிக்கிறேன் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!