மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமை வகித்து மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வரும் பொறுப்பை நிர்வாகிகள் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை தஞ்சை வடக்கு மாவட்டச் செயலர் அய்யப்பன், மாவட்ட அவைத் தலைவர் ராம் குமார் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டப் பொருளாளர் கண்ணபிரான், ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் கிழக்கு பழனிசாமி, மேற்கு கோபிநாதன், அம்மாபேட்டை வடக்கு ராமச் சந்திரன், தெற்கு சூரிய நாராயணன், பேரூர் செயலர்கள் பாபநாசம் சின்னையன், அய்யம் பேட்டை கோவிந்த சாமி, மெலட்டூர் சின்ன துரை, அம்மா பேட்டை காமராஜ், நிர்வாகிகள் முருகதாஸ், கண்ணன், முருகன், செல்வராஜ், ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். விளம்பர வாகனத்தை திருவாரூர் மாவட்டச் செயலர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் சேர்ந்தனர்.